இந்தியாகவர் ஸ்டோரிசெய்திகள்

3 மொழிகளில் மட்டுமே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை வெளியீடு – பா.ஜ.க.வின் சூட்சுமம் ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை 3 மொழிகளில் மட்டுமே மோடி அரசு வெளியிட்டிருப்பது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி மோடி அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வெளியிட்டது. இந்த அறிவிக்கையில் சில திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது. மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த திருத்தங்கள், வளர்ச்சியின் பெயரால் அழிவுப் பாதைக்கு அடித்தளம் அமைக்கும் என சூழலியல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் மற்றும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .

இந்தநிலையில், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை இதுவரை மூன்று மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது என ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது.

சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை அனைத்து மாநில மக்களும் புரிந்து கொள்ளும் விதமாக ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள ஆங்கிலம், இந்தி தவிர. குறைந்தது 10 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று கடந்த ஜூன் 30 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், கருத்துக் கேட்பு தேதியையும் ஆகஸ்ட் 11 வரை நீட்டித்து உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை முழுமையாக மத்திய அரசு இன்னும் செயல்படுத்தாமல், மராத்தி, ஒடியா, நேபாளி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே வெளியிட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வாலர்கள் குற்றச்சாட்டினர்.

இதனிடையே, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு வரும் 5ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close