சினிமாபொழுதுபோக்கு

நடிப்பில் மட்டுமல்ல இசையின் மீதும் ஆர்வம் உள்ளதை நிரூபித்துக் காட்டியுள்ளார் பிரேமம் நாயகி!

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் சல்மான், தமிழிலும் நடித்து ரசிகர்களால் வரவேற்கப்பட்டார். அவரது கியூட்நெஸால் இளம்பெண்களை வெகுவாய் ஈர்த்துள்ளார்.

ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பாடகராகவும் இருக்கும் இவர், இந்த ஆண்டு வெளிவந்த ‘வரனே அவஷ்யமுன்ட்’ என்ற மலையாளப் படத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

இதனையடுத்து தன்னுடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்த ஜேக்கப் கிரிகோரி என்பவரை கதாநாயகனாக வைத்து தயாரிக்கும் படம் தான் ‘மணியறையிலே அசோகன்‘. ஷம்சு சாய்பா இயக்கும் இந்த படத்தில் பிரேமம் படத்தின் மூலமாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன், நிகிலா விமல், அனு சித்ரா என 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள “உன்னிமையா,…” என்ற பாடலை துல்கர் சல்மான் பாடியுள்ளார்.

இதனையடுத்து இந்த படத்தின் கதாநாயகியான அனுபமா பரமேஸ்வரன்உன்னிமையா,…” பாடலை பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் தனக்கு இசையின் மீதும் ஆர்வம் இருக்கிறது என வெளிப்படுத்தியுள்ளார் அனுபமா.

ஏற்கனவே தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் உள்ள தனக்கு பிடித்த பாடல்களை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

10 Comments

  1. Hello, i think that i saw you visited my web site thus i came to “go back the favor”.I’m attempting to in finding things to improve my site!I assume its good enough to make use of a few of your ideas!!

Leave a Reply to ปั้มไลค์ Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button