இந்தியாகவர் ஸ்டோரி

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று – டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இதேபோல் நாட்டில் பல பாஜக தலைவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதால் மோடி அரசு கலக்கமடைந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்த கமல் ராணி வருணுக்கு, கடந்த ஜூலை 18 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட  நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனிடையே, மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இறுதிச் சடங்கில் பங்கேற்ற  மாநில பாஜக துணை தலைவர் அரவிந்த் படோரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதேபோல், மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சவுகான் உள்பட 4 பாஜக தலைவர்களுக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் மத்தியப் பிரதேச நீர்வளத் துறை அமைச்சர் துளசி சிலாவத், சிறுபான்மைத் துறை இணை அமைச்சர் ராம் கெலாவன் பட்டேல் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையில், மத்திய உள்துறை அமைச்சர் கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள செய்தியில், கொரோனா தொற்றால், தான் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தனது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close