இந்தியாபொழுதுபோக்கு

வெப்-சீரிஸ்கள் இனி பாதுகாப்பு துறையின் சான்றிதழ் பெறவேண்டும், வரும் புதிய கட்டுப்பாடு

ராணுவம், பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்படும் வெப் சீரிஸ்களுக்கு இனி தனியாக பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெறவேண்டும் என்று பாதுகாப்பு துறை சார்பில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது..

ஓ.டி.டி இணையதளங்களில் வெளிவரும் வெப் சீரியல் தணிக்கை செய்யப்படுவதில்லை. அதில் ஆபாசமாகவும், பிறரை அவமானப்படுத்தும் விதமாகவும் காட்சிகள் இருப்பதாக குற்றசாட்டு தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது, மேலும் அதை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

அந்த வகையில் எக்தா கபூர் தயாரித்துள்ள ‘டிரிபிள் எக்ஸ் அன்சென்சார்டு – சீசன் 2’ என்ற பெயரில் ஒரு வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. இதில் ராணுவ வீரர் எல்லையில் உள்ள போது அவரது மனைவி வேறொரு ஆணுடன் பழக்கம் வைத்திருப்பது போல் காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒரு காட்சியில் அசோக சக்கர முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ சீருடையைக் கிழிப்பது போல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

மேலும், இந்த சீரியல் தயாரிப்பாளர் மீது முன்னாள் ராணுவ வீரர் டி,சி ராவ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், ராணுவத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள், வெப் சீரிஸ்களில் இந்திய ராணுவத்தை அவமதிப்பது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை தவிர்க்கும் பொருட்டு, இனி இவற்றை வெளியிடுவதற்கு முன், தங்களிடமும் தடையில்லா சான்றிதழ் வாங்க நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.ராணுவம் குறித்த தவறான செய்திகளை வெளியிடுவதைத் தடுக்கவும், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் மனதைக் காயப்படுத்தாமல் தவிர்க்கவே இதை வலியுறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close