சினிமாபொழுதுபோக்கு

புதிய சாதனை படைத்த விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா பாடல்!

தமிழ் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ‘நானும் ரௌடி தான்’ மற்றும் ‘இமைக்கா நொடிகள்’. இந்த இரண்டு படமும் சூப்பர் ஹிட் கொடுத்தது.

Naanum Rowdy Dhaan' duo Nayanthara and Vijay Sethupathi to romance ...

இதனையடுத்து தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்திலும் நடித்து வருகின்றனர்.

Imaikkaa Nodigal | Neeyum Naanum Anbe Video Song Reaction | Vijay ...

 

 

 

 

 

 

இந்நிலையில் ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற “நீயும் நானும் அன்பே….” என்ற பாடல் 100 மில்லியன் பார்வையாளார்களை ஈர்த்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா, ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்’. இதில் நயன்தாராவின் பிளாஷ் பாக்கில் விஜய் சேதுபதி வருவார். அதில் நயன்தாராவுக்கு கணவராக நடித்திருந்தார். அதில் இடம்பெற்ற “நீயும் நானும் அன்பே…..” என்ற பாடல் யூடியுபில் 100 மில்லியன் பார்வையார்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இதனையடுத்து அப்படக்குழுவினர் தங்கள் மகிழ்ச்சியை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

கபிலன் வரிகளில், ரகு டிக்சித், சத்யப்ரகாஷ், ஜிதின் ராஜ் ஆகியோர் குரலில், ஹிப் ஹாப் தமிழனின் இசையில் வெளிவந்துள்ள இப்பாடல் வந்த புதிதிலே ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close