அமெரிக்காஉலகம்கவர் ஸ்டோரி

சீனாவின் டிக்டாக் செயலியை மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வாங்க திட்டம் – செயலிக்கு தடை விதிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை

சீனாவின் டிக்டாக் செயலியை, அமெரிக்காவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் வாங்க, திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான டிக்-டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வந்தனர். ஆனால், சீனாவின் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள், உலக நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக சீனா ராணுவத்தின் அத்துமீறலை கண்டித்து சீனாவின் டிக்டாக் செயலி உட்பட 100க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்த சூழலில் சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனம் தனது டிக்டாக் செயலியை அமெரிக்காவில் உள்ள மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்திற்கு விற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்காவிலும், டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படலாம் என்றும், இரண்டு வாய்ப்புகள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும்,  டிக் டாக்கிற்கு மாற்று குறித்து ஆராய்ந்து வருவதாகவும் டிரம்ப் கூறினார்.

இந்தநிலையில், அரசு ஊழியர்கள் தங்கள் செல்போன்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா அமெரிக்க செனட் சபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close