இந்தியாசெய்திகள்சேலம்தமிழ்நாடுமாவட்டம்

ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக 17.4 கிலோ வெள்ளி செங்கல் – சேலம் பாஜ.க. சார்பில் அயோத்திக்கு அனுப்பி வைப்பு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்காக, சுமார் 17 கிலோ வெள்ளி செங்கல் சேலம் பா.ஜ.க. சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வருகிற 5ம் தேதி உத்தரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்குகிறது. நிகழ்ச்சியில், பிரதமர் பங்கேற்க உள்ளதாலும், கொரோனா பரவல் காரணமாகவும், பொது மக்கள் கூடுவதைத் தவிர்க்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாநில அரசு எடுத்து வருகிறது.

இதனிடையே, பூமி பூஜைக்காக, நாட்டில் உள்ள புண்ணிய நதிகள் இருந்து தண்ணீர், மண் ஆகியவை கொண்டு செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. மேலும், பக்தர்கள் தங்கள் பகுதியின் சிறப்புப் பொருட்களையும் பூஜைக்காக அனுப்பி வருகின்றனர்.

இந்தநிலையில், சேலத்தில் பா.ஜ.க சார்பில் ரூ.12 லட்சம் செலவில் 17.4 கிலோ எடை கொண்ட வெள்ளியில் செங்கல் தயாரிக்கப்பட்டுள்ளது. 9 அங்குல நீளம், 4 அங்குல அகலம், 3 அங்குல உயரம் கொண்ட வெள்ளி செங்கலுக்கு, மரவனேரியில் உள்ள வெற்றி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள், பா.ஜ.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த வெள்ளி செங்கல் வருகிற 3ம் தேதி அயோத்திக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஶ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close