அரசியல்தமிழ்நாடு

“என்னுடனான தொடர்பை சீமான் ஒத்துக்கொள்ள வேண்டும்!” – நடிகை விஜயலட்சுமி பரபரப்பு பேட்டி

நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமானுக்கு இடையே தொடர்பு உள்ளதாக நடிகை விஜயலட்சுமி ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில், இதனை ஒப்புக்கொள்ளாத சீமானை கண்டித்து வீடியோவையும் வெளியிட்டார்.

இதனால் கோபமடைந்த ஹரி நாடார் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினர்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான விஜயலட்சுமி, கடந்த வாரம் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், 4 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்த விஜயலட்சுமி, தனது தற்கொலைக்கு காரணம் சீமானும், ஹரி நாடாரும் என்று மாஜிஸ்திரேட்டிடம் கூறிய பிறகும் சீமான் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்றும் மேலும் தான் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தார்.

இந்நிலையில் சென்னை திருவான்மியூரிலுள்ள தனது தற்காலிக இல்லத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி வெளியே வந்த நடிகை விஜயலட்சுமிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

இதனைத் தொடர்ந்து விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி, எனக்கு உதவி செய்கிறேன் என தொடர்ந்து தொந்தரவு செய்கிறார். தயவு செய்து எனக்கு பாஜகவினர் யாரும் உதவிட வேண்டாம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் “தொடர்ந்து என்னை தெரியாது என்று சொல்லும் சீமான், என்னை திருமணம் செய்ய வேண்டியதில்லை. ஆனால் என்னுடனான தொடர்பை ஒத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.

உங்கள் புகாரில் உண்மை இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பார்களே என்ற கேள்விக்கு..? “அதை நீங்கள் தான் காவல்துறையிடம் கேட்க வேண்டும்” என்றார்.

அதுமட்டுமின்றி “சீமானுக்கும் எனக்குமான உள்ள உறவு, இயக்குநர் அமீருக்கு தெரியும். ஆனால் அவர் ஏன் மெளனமாக இருக்கிறார்? என்று தெரியவில்லை” என்றார்.

“தற்போது நாயும், பூனையுமாக இருக்கும் நாங்கள் சேர்ந்து வாழ்வது என்பது சாத்தியமில்லை. அதை நானும் விரும்பவில்லை. பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். அவர் மெளனம் கலைக்கும் வரை நான் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுபடுவேன், என் உடல் நலம் மிகவும் மோசமாகி வருகிறது, எதேனும் பாதிப்பு ஏற்பட்டால் சீமான் தான் பொறுப்பு” என்றார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close