தமிழ்நாடுவிருதுநகர்

பள்ளி மாணவ மாணவிகளை வைத்து வீட்டில் பட்டாசு தயாரிப்பு! – மாணவர்களுக்கு நேர்ந்த கொடூரம்!

சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் பள்ளி மாணவர்களை வைத்து பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்டு வெற்றிலையூரணி, விஜயகரிசல்குளம், தாயில்பட்டி, மீனாட்சிபுரம் போன்ற பல்வேறு கிராமப்புற பகுதிகள் உள்ளன.

இந்த பகுதி மக்கள் ஏராளமானோர், அரசின் அனுமதியின்றி தங்களது வீடுகளில் பட்டாசு ரகங்களை தயார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் மற்றும் கூடலிங்கம் ஆகிய இரு சகோதரர்களும் தங்களது சகோதரி ஜெயராணி மூலமாக எந்த வித அனுமதியும் பெறாமல் தங்களது வீட்டில் வைத்து சரவெடி போன்ற பட்டாசு ரகங்கள் தயாரித்து வந்தனர்.

தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், தங்களது பிள்ளைகளையும் இந்த வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பட்டாசு தயாரிக்கும் மூலப் பொருளில், உராய்வு ஏற்பட்டு தீ விபத்துக்குள்ளானது.

இந்த தீ விபத்தில் ஜெயராணியின் மகள் 12 ஆம் வகுப்பு படிக்கும்  மாணவி சங்கரேஸ்வரியும், கூடலிங்கத்தின் மகன் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்னேஸ்வரனும் படுகாயமடைந்தனர்.

இதனையடுத்து அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக சிவகாசியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று, அதன் பின் மேல்சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் இந்த விபத்தில் அவர்கள் வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலானதுடன், வீடும், வீட்டில் இருந்த பொருட்களும் சேதமடைந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினர், தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள வெம்பக்கோட்டை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அரசின் அனுமதியின்றி வீட்டிலேயே வைத்து பட்டாசுகள் தயாரிக்கப் படுவதையும், பட்டாசுகள் உற்பத்தி செய்ய பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளை பயன்படுத்துவதையும் தடுத்து நிறுத்த வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ள நிலையில், இதுபோன்ற அரசுக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close