அரசியல்இந்தியா

ராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளிப்பேன்- ஹிந்துமஹாசபை தலைவர் மிரட்டல்

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று ஹிந்து மஹாசபை அமைப்பை சேர்ந்தவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜைக்கான விழாவில் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 200 பேர் பட்டியலில் சேர பெரும் போட்டியே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அகில இந்திய இந்து மகாசபாவின் தேசிய செயற்குழு உறுப்பினரான ரவீந்திரகுமார் துவேதி ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடுகையில், ‘அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை இடப்படும் நாள் எங்கள் வாழ்க்கையில் திருநாளாகும். அதை நேரில் தரிசித்து மகிழ எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இதை உங்கள் விழா நிர்வாகிகள் அனுப்பவில்லை எனில் நான் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்.’ என எச்சரித்துள்ளார்.

இதுபோன்ற பல கடிதங்கள் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளைக்கு வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close