தமிழ்நாடுதர்மபுரி

தமிழகத்தில் மீண்டும் ஒரு ஆணவக்கொலை??- அதிர்ச்சி சம்பவம்

பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தை சேர்ந்தவர் விஜி, இவர் அதேபகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரை அவர் பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி, கடந்த 6 மாதத்திற்கு முன் திருமணம் செய்திருக்கிறார்.

அதை தொடர்ந்து பெங்களுருவில் காய்கறி நடத்திவந்த விஜி தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் விஜியை தொடர்புகொண்ட அவரது மாமனார், காய்கறி வியாபாரத்தை விட்டுவிட்டு தன்னுடன் வந்து ரியல் எஸ்டேட் தொழிலை செய்யுமாறு கூறியுள்ளார். இதனை நம்பி இரண்டு நாட்களுக்கு முன் தனது மாமனாரை பார்க்க சென்ற விஜி வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் விஜியை தேடி பின் கும்மனூர் அருகே சாலையோரம் விஜி சடலமாக மீட்டுள்ளனர்.

அதை அறிந்த போலீசார் விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் மேற்கொண்ட விசாரணையில் விஜியின் மாமனார் தலைமறைவானது தெரியவந்துள்ளது. எனவே திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் விஜி அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close