இந்தியாபொழுதுபோக்கு

2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து இந்தியர்கள் முற்றிலும் வெளியே வரவேண்டும் – முகேஷ் அம்பானி வேண்டுகோள்

இந்தியா 2ஜி தொழில்நுட்பத்தில் இருந்து முற்றிலும் வெளியே வரவேண்டும் என தொழிலதிபர் முகேஷ் அம்பானி வலியுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழு வீச்சியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு திட்டங்களை பாஜக தலைமையிலான மோடி அரசு செயல்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், இந்திய மொபைல் தொலைதொடர்பு அமைப்பின் 25வது ஆண்டு விழாவில், ரிலைன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், உலக நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்தில் கால்பதித்து வரும் சூழலில், இந்தியாவில் 2ஜி தொழில்நுட்பத்தை 30 கோடி மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவை முழுமையான டிஜிட்டல் மயமாக்க வேண்டுமெனில், 2ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் இந்தியர்கள் அனைவரும், ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று முகேஷ் அம்பானி கூறினார்.

அப்போது தான் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் முழுமையடையும் என்றும் அவர் தெரிவித்தார் . ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.2,500 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close