தமிழ்நாடுமதுரை

நடமாடும் ரேஷன் கடைகள் விரைவில்! – அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மாவட்டம் பி.பி. குளம் அருகே உள்ள அரசு பள்ளியில் நடைபெறும் இரத்ததான முகாமை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று தொடங்கி வைத்தார். இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினயயும் கலந்துக் கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது,

“110 விதிகளின்படி நடமாடும் ரேஷன் கடைகள் மிக விரைவாக முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.

கிராமங்களில் 2 கிலோமீட்டர் முதல் 5 கிலோமீட்டர் வரை மக்கள் அனைவரும் நடந்து சென்று ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. அவர்களுக்கு நகரும் நியாய விலைக் கடை மூலம் எளிதாக பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்படுவதற்காக இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது” என்று தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி “வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி மதுரை வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல முக்கிய நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

2 ஆண்டுகளில் மதுரை வளர்ந்த நகரமாக மாறவுள்ளது. வைகை கூட்டு குடிநீர் திட்டம் மூலம் மதுரையில் குழாயை திறந்தால் 24 மணி நேரமும் தண்ணீர் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது” என்றும் கூறினார்.

மேலும் புதிய கல்விக் கொள்கையைப் பற்றியும் முதல்வர் அறிவிப்பார்” என்றும்;

“மெட்ரோ இரயில் நிலையங்களுக்கு அண்ணா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயர் வைப்பது எங்கள் முதல்வரின் வேண்டுகோள். வாஜ்பாய், அம்பேத்கார் பெயர் வைக்க பா.ஜ.க வின் வேண்டுகோள். மேலும் பெயர் வைக்க வேண்டுகோள் விடுப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” என்றும் கூறினார்..

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close