கவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

தமிழகத்தில் 3-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் இன்று முதல் அமல் – உணவுகங்கள், டீ கடைகள் கட்டுப்பாடுடன் செயல்பட அனுமதி

தமிழகத்தில் சில தளர்வுகளுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சிறிய வழிபாட்டு தலங்களை திறக்கவும், உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் கட்டுப்பாடுடன் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு 2.0 நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி,  தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

இந்தநிலையில்,  மூன்றாம் கட்ட ஊரடங்கு மற்றும் தளர்வுகள் தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில்  இன்று முதல் தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 75 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு தொடங்கியுள்ளது.

உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்தவும், பார்சல் சேவை மட்டும்  இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கவும், அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.

மேலும், ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள ரூ.10,000-க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள சிறிய திருக்கோவில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவலாயங்களில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் தமிழக முழுவதும் நடைமுறைக்கு வந்துள்ளது.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close