இந்தியாகவர் ஸ்டோரிகேரளா

30 கிலோ தங்க கடத்தல் வழக்கு – ஸ்வப்னா, சந்தீப் அளித்த புதிய தகவல்களால் சுங்கத்துறையினர் அதிர்ச்சி

கேரள தங்க கடத்தல் வழக்கில், ஸ்வப்னா, சந்தீப்புக்கு வரும் 21 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கொச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைடுத்து, இருவரும் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கடந்த ஜூன் 5 ஆம் தேதி, துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த பார்சலில், 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் பெயருக்கு அனுப்பப்பட்ட இந்த பார்சலை, திருவனந்தபுரம் விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, சந்தீப் நாயர், ஸ்வப்னா சுரேஷ், சரித் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம், சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைது செய்யப்பட்டவர்களுடன் கேரள முதல்வரின் முதன்மை செயலரும், தகவல் தொழில்நுட்ப துறை செயலருமான சிவசங்கரனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பைசல் பரீத். ராபின்ஸ் ஹமீத் ஆகியோருக்கு  ஆகியோருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வரும் நிலையில், ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை சுங்கத் துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். தங்கம் கடத்தல் தொடர்பாக கிடைத்த புதிய தகவல்கள் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இருவரது காவல் நிறைவடைந்த நிலையில், கொச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, இருவரையும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ஸ்வப்னா, சந்தீப் ஆகியோர் எர்ணாகுளம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close