இந்தியாகேரளா

கேரள முதல்வர் பதவிவிலக கோரி பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்!

தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாரதிய ஜனதா சார்பில் 18 நாட்கள் காணொளி மூலம் உண்ணாவிரத போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஸ்வப்னா நாயர் என்பவர் தங்க கடத்தலில் ஈடுபட்டார் என்று சொல்லி கைது செய்யப்பட்டார். மேலும் இதில் தொடர்பு இருப்பதாக முதல்வரின் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்தனர். இதனால் இதற்கு முதல்வர் பிணராயி விஜயனுக்கு தொடர்பு உள்ளது. எனவே அவர் பதவி விலகி வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக காணொளி மூலம் 18 நாட்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், கலந்துகொண்டு பேசிய பாஜக எம்.எல்.ஏ. ஓ.ராஜகோபால், முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக்கோரி நான் பாஜக மாநில அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருப்பேன் என்றார். இது முதல் நாள் என்றும், இது அனைத்து மாவட்டங்களிலும் 18 நாட்கள் தொடரும் எனவும் கூறினார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close