கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடுமற்றவை

இன்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை – சவரன் ரூ.41,568-க்கு விற்பனை

வரலாறு காணாத வகையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரித்து ரூ.41,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் தங்கம் பயன்பாடு அதிகளவில் இருப்பதாக கூறப்படுகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், அதன் மீதான மோகம் இன்றளவும் மக்களிடத்தில் குறையவில்லை. இதனால், ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.

தற்போது, கொரோனா பரவலால், மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.224 உயர்ந்து, ரூ.41,424 விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.28 அதிகரித்து ரூ.5,178 விற்பனை செய்யப்பட்டது.

இதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.40 காசுகள் உயர்ந்து, ரூ.72. 50 காசுகளுக்கும், ஒரு கிலோ ரூ.72,500 விற்பனையானது.

இந்தநிலையில் இன்று பிற்பகலில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.368 அதிகரித்து ரூ.41,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க டாலரின் மதிப்பு சரிவு, வங்கிகளில் குறைவான வட்டி விகிதம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய துவங்கியுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், வருங்காலங்களில் தங்கத்தின் விலை ரூ.50 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close