உலகம்பொழுதுபோக்குவைரல்

வடிவேல் பாணியில் 2.18 மணி நேரம் சும்மா இருந்த இளைஞரின் வைரல் வீடியோ – 18 லட்சம் பார்வையாளர்கள் ரசிப்பு

இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் சுமார் இரண்டரை மணி நேரம் சும்மாவே அமர்ந்தவாறு வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராகி வருகிறது.

சும்மா இருப்பதே சுகம் என்று நமது முன்னோர்கள் கூறுவதுண்டு. ஆனால் தற்போது பரபரப்பான காலக்கட்டத்தில் மக்கள் ஓய்வு கிடைக்காமல் வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தோனேசியாவில் 21 வயது இளைஞர் முஹம்மது திடித் என்பவர், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து எதுவும் செய்யாமல் இருக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

பார்வையாளர்களில் சிலரின் கோரிக்கைகளை ஏற்று இந்த வீடியோவை பதிவு செய்யததாக அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ 18 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இளைஞர்கள் பல்வேறு துறைகளில் சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில், இந்தோனேஷியாவில் இளைஞர் ஒருவர் 2 மணி நேரத்திற்கு மேலாக சும்மாவே அமர்ந்தவாறு வீடியோ வெளியிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Related Articles

9 Comments

  1. Thank you for every other wonderful post. The place else may just anyone get that type of information in such an ideal approach of writing? I have a presentation subsequent week, and I’m on the search for such info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button