அரசியல்இந்தியா

மாட்டிறைச்சி வைத்திருந்தார் என சந்தேகப்பட்டு நபரை கொடூரமாக தாக்கிய பசு காவலர்கள்!

டெல்லி அருகே மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக கூறப்பட்டு நபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வடஇந்தியாவில் பசு இறைச்சியை வைத்திருக்கிறார்கள் என்றும், அதை வாகனங்களில் கொண்டு செல்கிறார்கள் என்றும் கூறி அப்பாவி நபர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில், டெல்லி அருகே குர்கான் என்ற பகுதியில் காலை 9 மணி அளவில் ஒரு மினி வேன் சென்று கொண்டிருந்தது. அதில் மாட்டிறைச்சி கடத்தப் படுகிறது என்று சந்தேகப்பட்டு 8 கிமீ துரத்தி சென்ற கும்பல், அந்த வேனை மடக்கி பிடித்து அதன் ஓட்டுனரை சரமாரியாக அடித்துள்ளனர்.

இதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த அந்த நபரை அருகில் உள்ள பாட்ஷாபூர் என்கிற கிராமத்துக்கு தூக்கிச்சென்று அங்கும் அவரை தாக்கியுள்ளது அந்த கும்பல். இந்த தகவல் போலீசாருக்கு தெரிந்து அவர்களும் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.

பின், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இதுவரை அந்த கும்பலில் யாருமே கைது செய்யப்படவில்லை.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close