ஆந்திராஇந்தியா

கொரோனாவுக்கு பாஜக தலைவர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்பு காரணமாக ஆந்திராவில் பாஜக முன்னாள் அமைச்சர் மரணமடைந்துள்ளார்.

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் அறநிலையத்துறை முன்னாள் அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான பிடிகொண்டலா மனிகைலா ராவுக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது உடல் மோசமடைந்து இன்று அவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close