விளையாட்டு

மீண்டும் என்னை சேர்த்து கொள்ளுங்கள்!- முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கங்குலியிடம் கெஞ்சல்

தன்னை வர்ணனையாளர் குழுவில் சேர்க்கும் படி இந்திய முன்னாள் அணி வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கங்குலியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையை சேர்ந்த சஞ்சய் மஞ்ரேக்கர் இந்திய அணிக்காக ஆடியவர். அதன் பின் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளை வர்ணனை செய்து வந்தார்.

இவர்மேல் மும்பை வீரர்களுக்கு ஆதரவாக பேசுகிறார், மற்ற வீரர்களை குறை சொல்கிறார் என்கிற குற்றச்சாட்டு அடிக்கடி வைக்கப்படும். பின் கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கும் இவருக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இது போன்ற சம்பவங்களால் வர்ணனையாளர் குழுவில் இருந்து அதிரடியாக இவர் நீக்கப்பட்டார்.

இந்நிலையில், வரும் செப்டம்பர் 19-ந்தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ள நிலையில்,. தன்னை மீண்டும் போட்டி வர்ணனையாளர் குழுவில் சேர்த்துக் கொள்ளுமாறு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பி.சி.சி.ஐ.-க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்”நான் இனிமேல் ஒருபோதும் பிசிசிஐ விதிகளை மீற மாட்டேன். என்னை மீண்டும் வர்ணனையாளர் குழுவில் சேர்த்தால், மிகவும் மகிழ்ச்சி அடைவேன். தங்களின் பதிலுக்கு காத்திருக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close