இந்தியாஉலகம்கவர் ஸ்டோரி

வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழி அதிரடியாக நீக்கம் – மத்திய அரசு நடவடிக்கை

புதிய கல்விக் கொள்கையில் விருப்பத் தேர்வான வெளிநாட்டு மொழிகள் பட்டியலில் இருந்து சீன மொழி நீக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், புதிய கல்விக் கொள்கை 2020-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, 5-ம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டதுடன்,  6-ம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் பாடங்கள் கற்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழலையர் கல்வி முதல் இடைநிலைக் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் உலகளாவிய அணுகுமுறையை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் கடுமையாக எதிர்த்த மும்மொழிக் கொள்கையும் நாடு முழுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த புதிய கல்விக் கொள்கையில், விருப்ப மொழித் தேர்வாக இந்திய மொழிகள் பலவும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதேபோல் வெளிநாட்டு மொழிகளான கொரியன், ஜப்பான், தாய், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ், போர்த்துகீஸ், ரஷ்யன் உள்ளிட்ட மொழிகள் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

இந்தநிலையில், வெளிநாட்டு மொழிகள் பிரிவில் இருந்த சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினை காரணமாக சமீபத்தில் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட சுமார் 100 சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்ததுடன், அந்நாட்டுடனான உறவையும் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா துண்டித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close