இந்தியாபீகார்

பஞ்சாயத்துக்கு கட்டுப்பட்டு மனைவியை காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்!

இந்த காலத்திலும் பஞ்சாயத்து பேச்சுக்கு கட்டுக்குப்பட்டு திருமணம் ஆகி சில மாதங்களே ஆன தனது மனைவியை காதலனுக்கு மணமுடித்த கணவன்.

பொதுவாக தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் கல்வியறிவு மிகக் குறைவு. குறிப்பாக பீகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் இன்னமும் 70%கூட முன்னேறவில்லை. இதனால் தான் அவர்களுக்கு சட்டத்தைப் பற்றி பெரிதாக தெரிவதில்லை. போலீஸ், கோர்ட்டின் ஆகியவற்றின் தேவைகளும் இல்லை. அதனாலயே தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில் குற்றங்களும் அதிகமாக காணப்படுகிறது.

ஆனால் இன்னமும் சில கிராமங்களில் இந்திய சட்டத்தை விட, கிராம பஞ்சாயத்து தீர்ப்பையே மதிக்கிறார்கள். அப்படி ஒரு பஞ்சயத்திற்கு சென்ற ஒரு வழக்கின் தீர்ப்பு தான் நம் அனைவரையும் ஆச்சரியப்பட செய்திருக்கிறது.

அது என்னவென்றால் பஞ்சாயத்து தீர்ப்புக்கு கட்டுப்பட்டு தன் மனைவியை, மனைவியின் காதலனுக்கு மணமுடித்து வைத்தான் கணவன். இச்சம்பவம் பீகாரில் நடந்தேறியது.

பீகார் மாநிலத்தில் தட்ஜேசி என்ற கிராமத்தில் வசித்து வந்த ஒரு இளைஞருக்கும், ஒரு இளம் பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களிலே கணவன் வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டான்.

ஆனால் மனைவியோ, ஏற்கனவே கரம் பஸ்வன் என்ற இளைஞரை காதலித்து வந்திருக்கிறார். அவர்களின் காதல் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்துள்ளது.

அடிக்கடி ஒருவருக்கொருவர் சந்தித்து தங்களது காதலை பரிமாறிக்கொள்வர். அப்படி ஒரு சமயத்தில், இவர்கள் தனிமையில் இருக்கும்பொழுது கணவனின் உறவினர்கள் பார்த்துவிட்டனர்.

அதன் பின் இந்த சம்பவம் போலீசுக்கு செல்லாமல் பஞ்சாயத்திற்கு சென்றது. பஞ்சாயத்து தலைவர்கள் விசாரிக்கும்பொழுது தான் உண்மை தெரியவந்தது.

அப்போது அந்த பெண்ணின் காதலனான கரம் பஸ்வன், தானும் அந்த பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வருவதாக கூறினான். மேலும் அந்த பெண்ணின் சம்மதமின்றி இந்த திருமணம் நடைபெற்றுள்ளதாகவும்; அந்த பெண்ணுக்கு அவள் கணவனை பிடிக்கவில்லை என்றும் கூறினான்.

இவையனைத்தையும் கேட்ட பஞ்சயாத்து தலைவர்கள், பெண்ணின் கணவரை வரவழைத்தனர்.

அதன் பின்னர் அந்த பெண்ணின் கணவனுடைய சம்மதத்துடன், அந்த பெண்ணை, அந்த பெண்ணின் காதலான பஸ்வனுக்கு ஒரு கோவிலில் வைத்து மணமுடித்து வைத்தனர்.

அதன் பின் பஸ்வன் தனது காதல் மனைவியை தன் வீட்டிற்கு பைக்கில் அழைத்து சென்றார்.

இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஆனால் இந்த சம்பவம் குறித்து ஆரம்பத்தில் காவல்துறைக்கு எதுவுமே தெரியவில்லை. மேலும் யாரும் இதைபற்றி எந்த புகாரும் கொடுக்கவும் இல்லை.

அந்த ஊர்க்காரர்களே எல்லாவற்றையும் பேசி முடித்துவிட்டனர் என்கிறார்கள். இருப்பினும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close