இந்தியாகவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாட்டம் – சமூக இடைவெளியை கடைபிடித்து இஸ்லாமியர்கள் மசூதிகளில் தொழுகை

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. மசூதிகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

இறைத்தூதர் இப்ராஹீம் அவர்களின் தியாக வாழ்க்கையை நினைவு கூறும் வகையில் உலகம் முழுக்க பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று காலையில் வானில் பிறை தெரிந்ததை அடுத்து, டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில், சமூக இடைவெளியை கடைபிடித்து இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவிப்பதில் இஸ்லாமியர்கள் வழக்கமாக ஒன்றாகும். ஆனால், கொரோனா காரணமாக சமூக இடைவெளிவிட்டு அவர்கள் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர். பின்னர், ஏழை எளியவர்களுக்கு மாமிசங்களை பகிர்ந்து அளித்து இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் மசூதிகள் திறக்கப்படவில்லை என்பதால் இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தினர். அப்போது தனிமனித இடைவெளியுடனும், முக கவசங்களை அணிந்தவாறும் தொழுகை செய்தனர்.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தியாகத்தையும், நட்பையும் குறிக்கும் பக்ரீத் பண்டிகை, அனைவரின் நலனுக்காக பணியாற்ற வேண்டியதை எடுத்துரைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close