இந்தியாஉத்தரபிரதேசம்கவர் ஸ்டோரி

ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா – அமெரிக்கா, கனடா நாடுகளில் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில். வரும் 5 ஆம் தேதி ராமர் கோவில் கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கால் நாட்டுகிறார்.  இந்த நிகழ்ச்சியில் பாஜக மற்றும் விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர் என ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர்.

பூமி பூஜைக்கான முன்னேற்பாடுகளை ராமர் கோவில் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி அப்பகுதியில் காவல்துறையினர் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நிழ்ச்சியை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள கோவில்களில் பெரிய திரைகளில் நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். அங்குள்ள கோவில்களில் இந்துக்கள் கூட்டு பிரார்த்தனை நடத்தவும் முடிவு செய்துள்ளதாக கலிஃபோர்னியாவில் உள்ள இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, அயோத்தியில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close