ஆந்திராஇந்தியாகவர் ஸ்டோரி

கிரேன் சரிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் பலி – பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில், தொழிலாளர்கள், வழக்கம் போல் கப்பல் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் சரிந்து, பணியாற்றிக் கொண்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த தொழிலாளர்கள் பலர் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் பலி அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழு மற்றும் காவல்துறையினர், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், புதியதாக கொண்டு வரப்பட்ட கிரேனை, பொறுத்தும் போது விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close