அமெரிக்காஉலகம்வைரல்

நடுவானில் 2 சிறிய ரக விமானங்கள் மோதி விபத்து – சுற்றுலாப் பயணிகள் உள்பட7 பேர் பலி

அமெரிக்காவில் இரண்டு சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அலாஸ்கா மாகாணத்தில், சால்டோட்டனா விமான நிலையம் அருகே விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாரதவிதமாக மற்றொரு விமானத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 4 சுற்றுலாப்பயணிகள் உள்பட மொத்தம் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்துக்குள்ளான விமானம் ஒன்றை அலாஸ்கா மாகாண சட்டமன்ற உறுப்பினர் கேரி நாப், தானியாக இயக்கி வந்ததாகவும், விபத்தில் சிக்கி அவரும் உயிரிழந்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விமான விபத்து தொடர்பாகத் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. 2 விமானங்கள் மோதி 7 பேர் பலியான சம்பவம் அமெரிக்க மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close