கிரைம்தமிழ்நாடுதிருவள்ளூர்

9 மாத குழந்தையை கொடூரமாக கொன்று, தாயும் தற்கொலை!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 30). டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வரும் இவருக்கு, 25 வயதுடைய புவனேஸ்வரி என்ற மனைவியும், இளவரசி, நிகிதா, தபிதா என்ற 3 பெண்குழந்தைகளும் உள்ளனர். இதில் தபிதாவிற்கு வெறும் 9 மாதமே ஆகின்றது.

கடந்த 26 ஆம் தேதி புவனேஸ்வரி, தனது குழந்தையான தபிதாவை தூக்கிக் கொண்டு சென்றுவிட்டார். அதன் பின் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. சில மணி நேரங்களுக்கு பிறகு, ஆவடியை அடுத்த சேக்காடு என்ற ஏரியில் புவனேஸ்வரியின் சடலம் மிதந்து கொண்டிருந்தது.

அதன் பின் புவனேஸ்வரியின் சடலத்தை மீட்ட காவல் துறையினர், தாய் மட்டும் இருக்கிறார் குழந்தை தபிதாவை காணும் என்று தேடுகையில் புவனேஷ்வரி எழுதிய லெட்டர் ஒன்று கிடைத்தது.

அதில் “என்கிட்ட இருக்கிற எல்லா நல்ல குணமும் வீணாயிட்டு வருது.. என் பிரச்சனைகளை மறக்கணும் என்று தினமும் கடவுளை வேண்டுகிறேன்!.. ஆனால் எல்லாரும் என்னை கோமாளியா நினைக்கிறாங்க.. என் பிரச்சினைக்கு நல்ல முடிவு கொடுக்க வேண்டுகிறேன்… அதனால்தான் சாக போகிறேன்” என்று எழுதியிருந்தார் புவனேஷ்வரி.

இதனை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகிய காவல்துறையினர், குழந்தையை தேடும் பணியில் இரவு பகல் என்று பாராமல் தீவிரமாக ஈடுபட்டனர். செடி கொடிகள் நிறைந்த அந்த ஏரியில் குழந்தை சிக்கி இருக்கலாம் என்று சந்தேகித்த காவல்துறையினர், ட்ரோன் கேமரா மூலம் தேடினர். அதன் பின் குழந்தை தபிதாவை கண்டனர்.

ஆம்! அந்த ஏரியின் நடுவில் 9 மாதங்களே ஆன குழந்தை தபிதாவின் உடல் மிதந்துக்கொண்டிருந்தது. பின்னர் குழந்தையின் சடலத்தையும் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் எதனால் புவனேஸ்வரி இந்த முடிவை எடுத்தார் என்று தெரியவில்லை. ஒருவேளை குடும்பத் தகராறுக் காரணமாக அந்த 9 மாத குழந்தையை ஏரியில் வீசி கொன்று, தானும் தற்கொலை செய்திருக்கலாம் என்று அனைவரும் சந்தேகிக்கின்றனர். இருந்த போதிலும் இதன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close