கவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடுமாவட்டம்வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 7 மாவட்டங்களில் இடி- மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல
வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

7 Comments

  1. Whats up very cool website!! Man .. Excellent .. Amazing .. I will bookmark your website and take the feeds additionallyKI am glad to find a lot of helpful information right here in the post, we want work out extra techniques in this regard, thank you for sharing. . . . . .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button