உலகம்

350 யானைகள் உயிரிழப்பு, வெளிவந்த அதிர்ச்சி காரணம் !

ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா நாட்டில் கடந்த சில மாதங்களில் 350 க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு இயற்கையான நச்சு தன்மையே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த நாட்டில் திடீர் என்று தொடர்ச்சியாக யானைகள் இறந்து வந்துள்ளன.இதற்கு காரணம் வேட்டை என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் உயிரிழந்த யானைகளில் தந்தம் இருந்த காரணத்தால் வேட்டை காரணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும் யானைகளின் மாதிரிகள் சோதனைக்காக அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் அது குறித்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. அதில் யானைகள் அனைத்தும் இயற்கையான நச்சு மூலமே உயிரிழந்துள்ளதாக போட்ஸ்வானா அரசு தெரிவித்துள்ளது.

இயற்கையான நச்சு மூலம் யானைகள் இறந்த சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

8 Comments

  1. I do consider each of the ideas you may have offered for your post.
    They are really convincing and might definitely work.
    Nonetheless, the posts are too quick for newbies. Could you please lengthen them just a
    little from next time? Thanks for the post.

    My page; HarryAPanzer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button