இந்தியா

விராட் கோஹ்லி, தமன்னா ஆகியோரை கைது செய்ய கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் !

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்து வரும் விராட் கோஹ்லி, தமன்னா ஆகியோர் மேல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆன்லைனில் சூதாட்ட விளையாட்டுக்கு தனி மவுசு இருக்கிறது. அதை விளையாட அழைத்து பல இடங்களில் விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும் அந்த விளம்பரத்தை பார்த்து பலர் அந்த விளையாட்டில் இணைந்து, அந்த விளையாட்டுக்கு பலர் அடிமையாகி விடுகின்றனர்.

ஆனால் அந்த விளையாட்டுகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும் குற்றசாட்டை எழுந்துள்ளது. இதனால் பலர் தற்கொலை கூட செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் அது போன்ற விளையாட்டை தடை செய்யவேண்டும் என்றும், சூதாட்ட விளம்பரங்களில் அதில் நடித்து வரும் தமன்னா, விராட் கோஹ்லி போன்றவர்களை கைது செய்ய கோரியும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button