விளையாட்டு

சச்சினிடம் சேவாக்கை போல ஆடுமாறும் சேவாக்கிடம் சச்சினை போல ஆடுமாறும் கூறுவேன்- ஏன் என காரணத்தை கூறிய கபில்தேவ்

சச்சினிடம் சேவாக்கை போல ஆடுமாறும் சேவாக்கிடம் சச்சினை போல ஆடுமாறும் கூறி இருப்பதாக இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறியுள்ளார்.

இதுகுறித்து யூடியூப் சேனலில் டபிள்யு.வி.ராமனுடன் உரையாடிய கபில்தேவ் “சச்சின் டெண்டுல்கர் வேகப்பந்து வீச்சாளர்களின் ஸ்பின்னர்கள் என அணைத்து ஓவரிலுமே சிக்ஸர், பவுண்டரி விளாசும் திறமை உடையவர். ஆனால் ஒரே ஒரு இரட்டைச் சதம், அதிகம் முச்சதம் அடிக்கவேயில்லை என்பது வருத்தத்திற்குரியது.

சச்சின் மும்பை கிரிக்கெட் மனநிலையில் சிக்கிக் கொண்டார். மும்பை மனநிலை என்னவெனில் 100 ரன்கள் அடித்தவுடன், மீண்டும் புதிதாக 0-விலிருந்து தொடங்க வேண்டும் என்பது மும்பை கிரிக்கெட் மனநிலை.

அதனால் தான் நான் சச்சினிடம் அடிக்கடி கூறுவேன் நீ ஒரு கருணையற்ற ஆட்டக்காரன், விரேந்திர சேவாக் போல் ஆடு என்று, அதே போல சேவாக்கிடம் சச்சினைப் போல ஆடு என்று கூறுவேன். ஏனெனில் சேவாக்கிடம் நிறைய ஷாட்கள் கைவசம் உள்ளது. அரைமணி நேரம் நின்றால் பிறகு உன் ராஜ்ஜியம் என்பேன்.

சச்சினிடம் கூறும்போது விரேந்திர சேவாக்கைப் பார் என்பேன், சதம் எடுத்த பிறகு சேவாக் ஒவ்வொரு ஓவரிலும் 2 பவுண்டரிகள் அடிப்பேன் என்பது போலதான் ஆடுவார். அடுத்த 20 ஓவர்களில் சேவாக் இரட்டைச் சதத்துக்கு அருகில் இருப்பார்.

ஆனால் சதத்துக்குப் பிறகு சச்சின் டெண்டுல்கர் சிங்கிள் எடுத்து ரன்னர் முனைக்குச் செல்வார். ஆனால் எதிரணி பவுலர்கள் இவரைக் கண்டு பயந்து கொண்டிருப்பார்கள். எப்படி இவரை வீழ்த்தப் போகிறோம் என்று கவலைப்படுவார்கள்.

நான் ஒப்பிடவில்லை, சச்சினுடைய திறமை ஒப்பீடுகளுக்கு அப்பாற்பட்டது, அவர் திறமைக்கு குறைந்தது 10 இரட்டைச் சதம், 5 முச்சதங்களை அடித்திருக்க வேண்டும்.” என சச்சின் சேவாக் குறித்து கபில்தேவ் கூறினார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close