அரசியல்தமிழ்நாடு

சமஸ்கிருதத்துக்குப் பதிலாக தமிழை பயிற்றுவிக்க மத்திய அரசு முன்வருமா?- திமுக எம்.பி கேள்வி

சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழ் மொழியை இந்தியா முழுவதும் பயிற்சி மொழியாக கொண்டு வர முடியும? என திமுக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு அறிவித்த புதிய கல்வி கொள்கையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும் வகையில் வழங்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட திமுக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் “தமிழை எல்லா மாநிலங்களிலும் சொல்லிக்கொடுங்கள்.

இந்தியா முழுவதும் பரவியிருந்த மொழி தமிழ். முதன் முதலில் செம்மொழி என்ற அங்கீகாரத்தைப் பெற்றதும் தமிழ்தான். எனவே மும்மொழிக் கொள்கையின்கீழ் சமஸ்கிருதத்துக்குப் பதிலாக தமிழை எல்லா மாநிலங்களிலும் பயிற்றுவிக்க மத்திய அரசு முன்வருமா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Articles

7 Comments

  1. I have recently started a blog, the information you offer on this website has helped me tremendously. Thank you for all of your time & work. “The man who fights for his fellow-man is a better man than the one who fights for himself.” by Clarence Darrow.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button