சினிமாபொழுதுபோக்கு

‘ராஜமாதா சிவகாமி தேவியாக’ மாறிய வனிதாவை பார்!

தற்பொழுது சர்ச்சைக்குரிய நடிகையாக இருப்பவர் நடிகை வனிதா விஜயகுமார்.

பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்த பின்னர், இவர் பெரிய அளவில் பேசப்பட்டார். இதனைத் தொடர்ந்து லட்சுமிராமகிருஷ்ணன், சூர்யா தேவி, கஸ்தூரி, நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் இவரை சரமாரியாக விமர்சித்தனர்.

பின்னர் நயன்தாராவை பற்றியும் பேசினார். அதன் பின்னர் சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தை விட்டு வெளியேறினார். மேலும் “தஞ்சை ஆண்களுக்கு ரெண்டு பொண்டாட்டிகள்” என்று தஞ்சையை பற்றி சர்ச்சைக்குரியவாறு பேசி, மன்னிப்பும் கேட்டார்.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன், “தமிழக பிஜேபியில் 10 பேர் தான் இருப்பார்கள்” என்று பிஜேபியை பற்றி வனிதா என்றோ பேசிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதன் பின்னரும் இவரை யாரும் விடவில்லை.

லட்சுமிராமகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும்போது அவரை பற்றியும் அவரது கணவரை பற்றியும் அவதூறாக பேசினார் என்று லட்சுமிராமகிருஷ்ணனும்; அதன் பின்னர் சூர்யா தேவியை ‘கஞ்சா வியாபாரி’ என்று அவதூறாக கூறினார் என்று சூர்யா தேவியும்; வனிதாவின் திருமண விழாவிற்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகளவில் ஆட்களை வர செய்தார் என்று வனிதா வீட்டு அடுக்குமாடி குடியிருப்பு சங்க பொதுச் செயலாளர் நிஷா தோட்டா போன்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து வனிதாவின் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக இருக்கும் இவர், நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது அடிக்கடி ஷூட்டிங் செல்கிறார்.

அதனின் புகைப்படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வரும் வனிதா, நேற்று வெளியிட்ட புகைப்படத்தில் “ராஜமாதா சிவகாமி தேவி” என்று குறிப்பிட்டுள்ளார்.

View this post on Instagram

Rajamatha sivakami devi #kpy

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Vanitha Vijaykumar (@vanithavijayku1) | Twitter

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close