இந்தியா

பிளாஸ்மா தானம் செய்தால் 5000 ஆயிரம் ரூபாய் – முதல்வர் அறிவிப்பு

ஆந்திராவில் கொரோனா பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திராவில் இதுவரை 1,30,557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,281 பேர் பலியாகியுள்ளனர்.இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரம் 60 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு இதுவரை மருந்து பயன்பாட்டுக்கு வராத நிலையில் தற்போது கொரோனா பாதித்தவர்களுக்கு இந்தியாவில் பிளாஸ்மா சிகிச்சை மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா சிகிச்சையை அளிக்க முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆந்திர அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5,000 ஊக்கத்தொகையை வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. . இது தொடர்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close