தமிழ்நாடுதிருவள்ளூர்

மீண்டும் பெரியார் சிலையை சேதப்படுத்திய சமூக விரோதிகள் !

திருவள்ளுவர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை சமூக விரோதிகள் சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தால் மீண்டும் அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை, சுந்தராபுரத்தில் அமைந்திருக்கும் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசப்பட்டது. இதையடுத்து பல்வேறு அமைப்புகள் சார்பில் அந்த பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (21) என்பவர் தானாக முன் வந்து போலீசில் சரண் அடைந்தார். இவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Related Articles

7 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close