சினிமாபொழுதுபோக்கு

நாய் சேகரிலிருந்து பேய் சேகராக மாறும் வடிவேலு!…

கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவுக்கு நிகர் வடிவேலு தான்.
தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு அடையாளம் கொண்டிருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.

நாய் சேகர்', 'என்கவுண்டர் ஏகாம்பரம் ...அதிலும் தலைநகரம் படத்தில் ‘நாய் சேகர்‘, மருதமலை படத்தில் ‘ஏட்டு ஏகாம்பரம்’ போன்ற கதாபத்திரத்தை சிறப்பாக நடித்து ரசிகர்களின் மனதை மேலும் கொள்ளைக்கொண்டார்.

இந்நிலையில் அந்த இரண்டு படங்களையும் இயக்கிய இயக்குனர் சுராஜ், காமெடி நடிகரான வடிவேலுவின் நீண்ட இடைவெளிக்கும் ஒரு வழியாகாட்டியாக இருந்தார்.

அவரின் காமெடியின் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த திரைப்படம் தான் விஷால், தமன்னா நடிப்பில் வெளியான ‘கத்திச்சண்டை’. அந்த படத்தில் அவரின் அறிமுகம் வரும்போது, அவரின் வசனமே “ஐ அம் பாக் (I am back)!” என்று தான் இருக்கும்.

மீம்ஸ் நாயகன் கேட்ட சம்பளம்! அதிர்ச்சியில் இயக்குனர்.!

அதன் பின் அவர் கடைசியாக நடித்த படம் ‘மெர்சல்’. தற்போது கமல்ஹாசனின் ‘தலைவன் இருக்கிறான்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, நடிகர் வடிவேலு ‘வெப் சீரிஸ்‘ ஒன்றில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. ஆனால் அவர் தரப்பினர் அதனை திட்டவட்டமாக மறுத்தனர்.

தற்போது இதனை உறுதிசெய்தனர் அவர் தரப்பினர். இயக்குனர் சுராஜ் இயக்கவிருக்கும் ஒரு பேய் கதையில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆரம்பத்தில் இதை திரைப்படமாக எடுக்கலாம் என்று முடிவு செய்த இயக்குனர், வடிவேலுவின் விருப்பத்திற்கேற்ப தற்போது இதனை வெப் சீரிஸாக எடுக்க திட்டமிட்டிருக்கிறார்.

9 எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸுக்கு ‘பேய் சேகர்‘ என பெயர் வைத்துள்ளார்களாம். நாய் சேகர் கதாபாத்திரத்தில் தெறிக்கவிட்ட வடிவேலு, தற்போது ‘பேய் சேகர்‘ என்ற திகில் கலந்த காமெடி கதையில் மிரட்ட போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close