சினிமாபொழுதுபோக்கு

ஹர்பஜன் சிங் லோஸ்லியா இணைந்து நடிக்கும் ‘ப்ரெண்ட்ஷிப்’ பட டீசர் வெளியீடு.!

ஹர்பஜன் சிங்கின் முதல் தமிழ் படமான ‘ப்ரெண்ட்ஷிப்’ படத்தின் டீஸர், ‘சர்வதேச நண்பர்கள் தினத்தை’ சிறப்பிக்கும் வகையில் நேற்று வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தனர்.

பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் சினி உலகிற்கு அறிமுகமானது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே இந்தி, பஞ்சாபி ஆகிய 2 மொழிகளில் 3 படங்களில் சிறப்பு காட்சிகளில் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழில் ‘டிக்கிலோனா’, ‘ப்ரெண்ட்ஷிப்’ ஆகிய 2 படங்களில் நடித்து வருகிறார்.

பஞ்சாபியை தாய்மொழியாக கொண்ட ஹர்பஜன் சிங்,

கடந்த 2018 ஆம் ஆண்டில் தனது ட்விட்டர் பக்கத்தில் பல பதிவுகளை தமிழில் பதிவிட்டு அனைவரையும் வியக்க செய்தார்.

இந்நிலையில் தமிழில் 2 படங்கள் நடித்துக்கொண்டிருப்பது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Friendship - Official First Look Motion Poster [Tamil] | Harbhajan ...மேலும் கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி ‘ப்ரெண்ட்ஷிப்’ படத்தின் பர்ஸ்ட் மோஷன் பிக்ச்சர் வெளியானது.

இந்நிலையில் ‘நண்பர்கள் தினமான’ நேற்று இதனின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

 

ஹர்பஜன் சிங், பிக்பாஸ் லோஸ்லியா, அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகும் இப்படத்தை ‘சென்னையில் ஒரு நாள் 2’ படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூரியா ஆகியோர் இயக்குகின்றனர்.

ஹர்பஜன் சிங்கிற்கு மட்டுமல்லாமல் லோஸ்லியாவிற்கும் இது முதல் படமாகும். ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் சதீஸ் ஹர்பஜனின் நண்பராக நடிக்கிறார்.

சினிமாஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை சீன்டோவா பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close