கவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

கொரோனா உயிர் காக்கும் மருந்தின் விலை மும்மடங்கு உயர்த்தி தமிழகத்தில் விற்பனை

கொரோனாவுக்கு உயிர் காக்கும் மருந்தாக பரிந்துரைக்கப்பட்ட ரெம்டெசிவிர், தமிழ்நாட்டில் மும்மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான கிலீட் சைன்சஸ் நிறுவனம், கொரோனா உயிர் காக்கும் ரெம்டெசிவிர் மருந்தை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசிடம் அனுமதி கோரியிருந்தது. அதன் அடிப்படையில், அதற்கு சில  கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு மிகச் சிறந்த மருந்தாக ரெம்டெசிவிர் பரிந்துரைக்கப்பட்டதால், நோயாளிகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, இந்த மருந்தை முதன்முதலாக ‘சிப்லா’ நிறுவனம் இந்தியாவில் சந்தைப்படுத்தியது.

இதனால் ரெம்டெசிவிர் மருந்தின் தேவை இந்தியாவில் பெருமளவு அதிகரிக்க தொடங்கியது. கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாக பார்க்கப்படும் ரெம்டெசிவிரின் 100 மில்லி கிராம் அடங்கிய ஒரு மருந்து பாட்டிலின் விலை ரூ.3,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா நோயாளியை குணப்படுத்த கிட்டத்தட்ட 5 முறையாவது ரெம்டெசிவிர் மருந்தை  கட்டாயம் செலுத்த வேண்டிய ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் மருந்தின் விலை மும்மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.12 ஆயிரம் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் ரெம்தேசிவிர் மருந்து போதிய இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் மருத்துவமனைகள், மருந்தின் விலையை உயர்த்தி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமெரிக்காவிலும் ரெம்டெசிவிர் மிக அவசர தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்தை இன்னும் பரவலாக பயன்படுத்துவதற்கு, சில பரிசோதனைகள் செய்யப்பட வேண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close