கவர் ஸ்டோரிசென்னைசெய்திகள்தமிழ்நாடு

கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்த அனுமதி – இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அசூர வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது. இருப்பினும் மாநிலத்தில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்தநிலையில், கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்துகள் பயன்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். அதன்படி, சிறுவில்வம், திப்பிலிவேர், தலமூலம் உள்ளிட்ட 17 மூலிகைகள் அடங்கிய இந்துகாந்த கஷாயம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

மேலும்,  கடுக்காய் உள்ளிட்ட 27 பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அகஸ்திய ரசாயனம், வெண்பூசணி உள்ளிட்ட 11 பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கூஷ்மாண்ட ரசாயனம் ஆகியவையும் நோயை எதிர்த்து போராடும் வல்லமை படைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மருந்துகளை, தமிழகத்தின் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துமனை ஆகியவற்றில் எவ்வித கட்டணமும் இன்றி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாடு அரசால் சித்தா மருந்தான கபசுர குடிநீர், ஓமியோபதி மருந்தான ஆர்செனிக் ஆல்பம் 30C ஆகியவை எவ்வித கட்டணமும் இல்லாமல் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா சிகிச்சைக்கு மருந்து இல்லாத நிலையில், சித்தா மற்றும் ஆயுர்வேதா உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்கு ‘ஆரோக்கியம்’ திட்டத்தினை கடந்த ஏப்ரலில் முதலமைச்சர் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close