இந்தியா

கொரோனா பாதிப்பு இரண்டு மாதத்தில் 55 லட்சத்தை தாண்டும்- ப.சிதம்பரம்

இப்படியே சென்றால் கொரோனா பாதிப்பு இரண்டு மாதத்தில் 55 லட்சத்தை தாண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இந்தியா கொரோனா பாதிப்பில் உலகளவில் 3ம் இடத்தில உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 55,079 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பம் “இந்த கணிதம் எளிமையானது. ஆனால் பயமுறுத்துகிறது. இந்த விகிதத்தில் போனால், ஆகஸ்ட் இறுதிக்குள் இந்தியா 30 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றுநோய்களைப் பதிவு செய்யும். இதே மாதிரி தினசரி விகிதம் அதிகரித்தால், ஆகஸ்ட் இறுதிக்குள் 33 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களையும், 2020ம் ஆண்டு செப்டம்பர் இறுதிக்குள் 55 லட்சத்திற்கும் அதிகமான தொற்றுநோய்களையும் பதிவு செய்யும்.

கடவுள் தடைசெய்தாலும், கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் இந்தியா உலக நாடுகளில் முதல் இடத்தைப் பிடிக்க கூடும். பிரதமர் தனது கைகளில் அனைத்து அதிகாரங்களையும் வைத்திருக்கிறார். கொரோனா தடுப்பு ஒரு முழு தோல்வி” என பதிவிட்டுள்ளார்.

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close