இந்தியாதமிழ்நாடு

இந்தியாவில் தடை செய்யப்படுகிறதா யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் நிறுவனங்கள் ?

யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களை தடை செய்யக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “கொரோனா பேரிடரால் ஏற்கெனவே உலகமே தத்தளித்து வரும் சூழலில் தற்போது யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வெறுப்பு பிரசாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள் தொடங்கி கடவுள்கள் வரை அவமதிக்கப்படுகின்றனர். தனிநபர்கள் சிலர், தங்களுடைய பேச்சுக்கள் மற்றும் கட்டுரைகளால் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றனர்.

வன்முறையை தூண்டும் ஆபாச உள்ளடக்கங்கள் அடங்கிய செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடக்கூடாது என சமூக வலைதளங்கள் விதிகள் வகுத்துள்ள போதும், இதுபோன்ற வீடியோக்கள் தொடர்ந்து பதிவிடப்படுகின்றன. அவற்றை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. கடந்த 2018ம் ஆண்டு சமூக வலைதளங்களை கண்காணிக்க மாநில சைபர் கிரைம் போலீஸார் வலுப்படுத்த மத்திய அரசு விதிகளை வகுத்துள்ளது. அந்த விதிகளை பின்பற்றி இருந்தால் இதுபோன்ற சட்டவிரோத நிகழ்வுகள் தடுக்கப்பட்டிருக்கும். கந்த சஷ்டி கவசம் தொடங்கி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் இதுபோன்ற வீடியோக்களை வெளியிட்ட யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு தொடர்பாக 3 வாரத்தில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

Related Articles

11 Comments

  1. Fantastic blog! Do you have any hints for aspiring writers? I’m planning to start my own blog soon but I’m a little lost on everything. Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m totally overwhelmed .. Any tips? Thank you!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button