ஆந்திராஇந்தியாகவர் ஸ்டோரி

ஆந்திராவில் போதைக்காக சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்ததில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

ஆந்திராவில் போதைக்காக சாராயத்தில் சானிடைசரை கலந்து குடித்த சம்பவத்தில், பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், குரிச்சேடு கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. மதுபானங்களின் விலை, ஆந்திராவில் தாறுமாறாக உயர்ந்துள்ளதால், மது பிரியர்கள் வாங்க முடியாமல் தவித்துள்ளனர்.

இந்தநிலையில், அங்குள்ள தொழிலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என 10க்கும் மேற்பட்டோர், நேற்று போதைக்காக, நோய்க்கிருமிகளை அழிக்க பயன்படுத்தும் சானிடைசர்களை குடித்துள்ளனர்.

அவர்களுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். சானிடைசர் குடித்ததால் அவர்களின் குடல்கள் மற்றும் கல்லீரல் வெந்து போய் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், சானிடைசரை குடித்தவர்களில் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பலர் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

போதைக்காக ஆல்கஹால் கலந்திருக்கும் சானிடைசரை, சாராயத்தில் கலந்து குடித்து 13 பேர் உயிரிழந்த சம்பவம், கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Related Articles

12 Comments

  1. Hi, Neat post. There is a problem with your web site in internet explorer, would test this… IE still is the market leader and a big portion of people will miss your excellent writing because of this problem.

  2. Howdy would you mind stating which blog platform you’re working with? I’m planning to start my own blog in the near future but I’m having a tough time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal. The reason I ask is because your design seems different then most blogs and I’m looking for something completely unique. P.S My apologies for getting off-topic but I had to ask!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button