கிரைம்தமிழ்நாடுதிண்டுக்கல்

8 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமை செய்த 15 வயதுடைய 5 சிறுவர்கள் – போலீசார் விசாரணை!

திண்டுக்கல், கக்கன் நகரை சேர்ந்த 8 வயது சிறுமி வான்மதி. இவர் அங்கிருக்கும் ஒரு தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து கொண்டிருக்கிறார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் அவரது வீட்டின் அருகில் இந்த சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே 15 வயதுக்குட்பட்ட 5 பேரும், அதில் ஒருவனுடைய சகோதரன் 21 வயது இளைஞர் ஒருவரும் இருந்தனர்.

அவர்கள் அந்த சிறுமியை பார்த்துக்கொண்டிருந்தனர். அதன் பின் சுற்றிலும் யாருமில்லை என்ற காரணத்தினால் அவர்கள் 6 பபேரும் அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொடுமைப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று இரவு அந்த சிறுமி, அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அச்சிறுமியின் தந்தையான பாலகுரு, இந்த சம்பவத்திற்கு காரணமான அந்த 6 பேரில் சகோதரர்களான இருவரின் தந்தையிடம் (பர்னா பாசு என்பவரிடம்) நேரில் சென்று புகார் தெரிவித்தார். இதற்கு அவர் அலட்சியமாக பதிலளித்ததால்  இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின் இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தையான பாலகுரு, இன்று திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தன்னை தாக்கியவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்

பின்னர் இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியதில் 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்த சம்பவம் உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து 21 வயது இளைஞர்  (ஜெயசீலன்) மற்றும் 15 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுவர்கள் (உதயகுமார் , மகேஷ் , ரித்தீஷ் , யுவேந்திரன்  மற்றும் ஒரு சிறுவன்)   என 6 பேரையும் போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர்  பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்யுமாறு மகளிர் காவல் நிலையத்தில் அந்த 6 பேரையும் போலீசார் ஒப்படைத்தனர்.  மகளிர் காவல் நிலைய போலீசார் 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எட்டு வயதே நிரம்பிய சிறுமிக்கு பாலியல் கொடுமை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Related Articles

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close