சென்னைசெய்திகள்தமிழ்நாடுவானிலை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மீனவர்களை பொறுத்தவரை அடுத்த 4 நாட்களுக்கு மன்னார்வளைகுடா, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல், கடலோர கேரளா, கர்நாடகா லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் காவேரிபாக்கம் மற்றும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தலா 7 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது. விழுப்புரத்தில் 6 சென்டி மீட்டரும், திருவள்ளுர் மாவட்டம், தாமரைப்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

Related Articles

8 Comments

  1. I have not checked in here for some time since I thought it was getting boring, but the last several posts are great quality so I guess I¦ll add you back to my daily bloglist. You deserve it my friend 🙂

  2. Hey! This is kind of off topic but I need some help from an established blog. Is it hard to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about setting up my own but I’m not sure where to begin. Do you have any points or suggestions? With thanks

Leave a Reply to กรองหน้ากากอนามัย Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button