கல்வி வேலை வாய்ப்புகவர் ஸ்டோரிசென்னைதமிழ்நாடுமாவட்டம்

11-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு – 96 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி

11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 8,30,554 பேர் எழுதியிருந்தனர். இந்தநிலையில்,  11-ம் வகுப்பிற்கான முடிவுகள் dge.tn.gov.in, tnresults.nic.in என்ற இணையதளங்களில் இன்று காலை வெளியிடப்பட்டது. மேலும், மாணவர்கள் தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் மூலமும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியானது. அதன்படி, 96.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக மாணவிகள் 97.49 சதவீதமும், மாணவர்கள் 94.38 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோயம்புத்தூர் 98.10 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. 97.90 சதவீதத்துடன் விருதுநகர் 2-வது இடத்திலும், 97. 51 சதவீதத்துடன் கரூர் 3-வது இடத்திலும் உள்ளது.

Related Articles

10 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button