உலகம்

ஓட்கா குடித்தால், கொரோனா ஓடி விடும்- அதிபரின் முட்டாள்தன அறிவிப்பு

வோட்கா குடியுங்கள், கொரோனாவை விரட்டுங்கள் என்று பெலாரஸ் நாட்டு அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் உள்ள பெலாரஸ் நாட்டின் அதிபராக உள்ள அலெக்சாண்டர் லுகாசென்கோ, 1994ம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். தீவிர வலதுசாரியான அவர் கொரோனா வைரஸை இவர் ஆரம்பம் முதல் அலட்சியம் செய்து வந்தார்.

கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும், நாட்டு மருத்துவத்தையே பின்பற்றுமாறும் நாட்டு மக்களுக்கு கூறினார். மேலும், அந்நாட்டில் ஊரடங்கையும் இது வரை அமல்படுத்தவில்லை. அந்நாட்டின் சுகாதாரத்துறை அறிவுரைகளையும் கேட்க மறுக்கிறார்.

மொத்தம் 95 லட்சம் மக்கள் தொகையை கொண்ட அந்நாட்டில் இதுவரை 67,670 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 553 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 61,442 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிபர் அலெக்சாண்டர் லுகாசென்கோ கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், மருத்துவர்கள் இது அறிகுறியற்ற நோய் என்று கூறியுள்ளனர். நம் நாட்டில் 97 சதவீதம் பேர் அறிகுறி இல்லாமலேயே இந்த நோய்க்கு பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் நாம் கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும். இந்நோய் ஒரு மனநோய்தான், அதனால் வோட்கா குடித்தபடி கொரோனாவை விரட்டுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close