அரசியல்தமிழ்நாடு

“யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது?”- திமுகவை சாடிய ராஜேந்திர பாலாஜி

“யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது?” என்று திமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு,திமுக ,இடதுசாரிகள் ஆகியவை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் OBC பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து இது திமுக வின் சமூகநீதி போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என திமுக சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதை பற்றி ட்விட்டரில் பதிவிட்ட பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி யார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கோருவது? வழக்கை தொடுத்து வாதாடி வென்றது அ.தி.மு.க. அதற்கு உரிமை கோருவது தி.மு.க. சொந்த புத்தியும் இல்லை, உழைப்பும் இல்லை. அன்று முதல் இன்று வரை ஒட்டுன்னி அரசியல் செய்வது தி.மு.க. சமூகநீதி கட்சி என வாய் கிழிய அடுக்கு மொழி வசனம் பேசும் திமுக, மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போதும் கூட OBC இட ஒதுக்கீட்டுக்காக எந்த ஒரு துரும்பையும் எடுத்து போடவில்லை.

அதிமுக தான் சட்டப்போராட்டம் மூலம் OBC மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீடு பெற்று தர கோரிக்கையை முன்னெடுத்துள்ளது, மீண்டும் நம் மண்ணில் சமூக நீதியை மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் எடப்பாடியாரின் தமிழக அரசு நிலைநாட்டியுள்ளது,இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலன் அதிமுக மட்டும் தான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது!” என காட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button