அரசியல்சென்னைதமிழ்நாடுவைரல்

முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் பாலியல் புகாரில் சிக்கியது எப்படி?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த கல்லடிவிளை கிராமத்தில் பெட்டிக்கடை வைத்திருந்தவர் தான் முருகேசன். இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். பெட்டிக் கடைக்கு வந்த சில நிலத் தரகர்களிடம் ஏற்பட்ட தொடர்பினால், கடந்த 2005 ஆம் ஆண்டு அவர் ரியல் எஸ்டேட் தொழிலில் தொடங்க வாய்ப்பாக அமைந்தது. ஒரு கட்டத்தில் பிளாட் போட்டு விற்கும் அளவுக்கு முருகேசன் உயர்ந்தார்.

அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதை அடுத்து, கடந்த 2006 ஆம் ஆண்டில் அவர் பாஜகவில் இணைந்தார். முருகேசனுக்கு செல்வாக்கு உயர்ந்ததால், நாகர்கோவில் நகரப் பொருளாளராக பதவி பெற்றார். அப்போது தான் தனது பெயரை நாஞ்சில் முருகேசன் என மாற்றிக்கொண்டார்.

2009 காலக் கட்டத்தில் கன்னியாகுமரியில் அதிமுகவுக்கு சரியான நிர்வாகிகள் கிடைக்காததால், இதனை நல்வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட நாஞ்சில் முருகேசன்,  பா.ஜ.க.வில் இருந்து அ.தி.மு.க.வுக்கு தாவினார். கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்தில், குமரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆனதால், ரியல் எஸ்டெட் மூலம் வந்த பணத்தை கட்சிக்காக அவர் வாரி இறைத்தார்.

2011 தேர்தலில் எதிர்பார்த்தபடியே நாகர்கோவில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்ட முருகேசன், பலத்த போட்டிகளுக்கு இடையே வெற்றி வாகை சூடினார்.  இவரை எதிர்த்து போட்டியிட்ட பொன் ராதாகிருஷ்ணன், மகேஷ் ஆகியோர் குறைவான வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தனர்.

அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற பார்த்திருந்த நிலையில், நாஞ்சில் முருகேசன் மாவட்டச் செயலாளர் ஆனார். கட்சியில் முக்கிய நபராக வளம் வந்த இவர், நாகர்கோவில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக உயர்ந்தார். ஆனால், 2016 தேர்தலில் மீண்டும் நாகர்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் நின்ற நாஞ்சில் முருகேசன், திமுக மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜனிடம் தோற்றார்.

இதனையடுத்து கட்சில் இருந்து சற்று விலகி இருந்த சமயத்தில் தான் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் நாஞ்சில் முருகேசன் சிக்கிக்கொண்டார். சிறுமி அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்யப்பட்டார்.

ஆனால், சிறுமியின் தாயாருக்கும், நாஞ்சில் முருகேசனுக்கும் அரசியல் ரீதியாக நெருக்கம் இருந்தாதால்,  இதனை வைத்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக கூறப்படுகிறது. மேலும்,  காதலுனுடன் பழகுவதை தடுத்ததால், நாஞ்சில் முருகேசன் மீது சிறுமி பாலியல் புகார் கொடுத்தாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

நாகர்கோவிலில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த நாஞ்சில் முருகேசன், சிறுமியின் பாலியல் புகாரால், அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

12 Comments

  1. You can definitely see your enthusiasm within the work you write. The world hopes for even more passionate writers such as you who aren’t afraid to say how they believe. At all times go after your heart. “We are near waking when we dream we are dreaming.” by Friedrich von Hardenberg Novalis.

  2. Amazing blog! Is your theme custom made or did you download it from somewhere? A design like yours with a few simple tweeks would really make my blog jump out. Please let me know where you got your theme. Thank you

  3. Thank you for another informative website. Where else could I get that type of info written in such an ideal way? I have a project that I’m just now working on, and I’ve been on the look out for such information.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button