இந்தியாஉலகம்கவர் ஸ்டோரிசெய்திகள்

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட விடாமல் தடுக்க தீவிரவாதிகள் சதித் திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

இந்திய – பாகிஸ்தான் எல்லைகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் பயிற்சியளிக்கப்பட்ட தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீர் ரஜோரி மாவட்டம் நவ்செரா எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். ஒருவர்படுகாயம் அடைந்த நிலையில், மேலும் 2 தீவிரவாதிகள் பாகிஸ்தான் எல்லைக்குள் தப்பியோடி விட்டனர்.

இந்தநிலையில், இந்தியா – பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில், ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. அவ்வப்போது, காஷ்மீருக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள தீவிரவாதிகளை, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக வரும் 5 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்படுவதால், அதனை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags

Related Articles

6 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close